Home     Coimbatore News      City news      கோயமுத்தூரில் குஜால் காட்டேஜ் 18+ !!!

கோயமுத்தூரில் குஜால் காட்டேஜ் 18+ !!!

   
கோயமுத்தூரில் குஜால் காட்டேஜ் 18+ !!!

கோவை: பெண்களுடன் குஜால் பண்ணவே ஒரு காட்டேஜ் கட்டி விட்டிருக்கிறார்கள் அதுவும் நம்ம கோயமுத்தூரில்தான் என்றால் நம்ப முடிகிறதா ?

கோவை பீளமேட்டில் தான்  இப்படிபட்ட காட்டேஜ் கட்டப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கல்யாணம் ஆகாத பெண், ஆண் சேர்ந்து வாழ இப்படிப்பட்ட வீடுகளை வாடகைக்கு தனியார் நிறுவனம் ஒன்று கட்டி விட்டுள்ளதாம், நவ இந்தியா பகுதியில்தான் இந்த சர்ச்சைக்குரிய லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. அதன் பெயர் "ஓயோ சில்வர் லாட்ஜ்"(Oyo Lodge) என்பதாகும்.

 இந்நிறுவனமானது பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் கல்லூரிகள் அதிகமாகவுள்ள இடம் என்பதால் என்னவோ இந்த இடத்தை தேர்ந்து எடுத்து லாட்ஜ் கட்டப்பட்டிருக்கின்றன. இளஞ்ஜோடிகள், சின்னஞ்சிறுசுகள் மற்றும் கள்ளக்காதலர்கள் இவர்களுக்காகவே செயல்பட்டு வந்திருக்கிறது. 

Oyo lodge Sealed

"கல்யாணம் ஆகாமல் ஆண், பெண் இங்கு தங்கலாம், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்" என்ற விளம்பரத்தை பகிரங்கமாவே இணையத்தில் வலம்வர செய்திருந்தது இந்த லாட்ஜ். பொதுவாக பார்க் (Park), தியேட்டர்(Theater), மால்(Mall) போன்ற இடங்களுக்கு சென்று கொண்டிருந்தவர்களை, இந்த விளம்பரத்தின் மூலம் தனது லாட்ஜுக்கு வரவழைத்திருக்கின்றது இந்நிறுவனம் 

இதனால் எந்நேரமும் அங்கு இளம் பெண்கள், ஆண்கள் கூட்டம் இருந்து கொண்டே உள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கும் என்பதால், இது போன்ற காட்டேஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகார் எழுந்தது. ஆகவே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கலெக்டரை(Collector) பார்த்து நேற்று முன்தினம் ஒரு புகார் மனுவையும் அளித்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட லாட்ஜ் குறித்து ஆய்வு செய்யும்படி மாவட்ட ஆட்சியர் காவல்துறையினரையும், வருவாய்துறையினரையும் கேட்டுக் கொண்டார். அதன்படியே இவர்கள் ஆய்வு செய்து, கலெக்டரிடம் அறிக்கையும் அளித்தனர். அந்த அறிக்கையின்படி,  சர்ச்சைக்குரிய செயல்களை செய்ய வாடகைக்கு அளித்த அந்த லாட்ஜ்-க்கு சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து, தெற்கு வட்டாட்சியர் சீல் வைத்தார்.

Related News