கோவை ஆர்.எஸ்.புரம் புறத்தில் லேக்கிகா அவர் தனுது மகனுக்கு சைக்கிள் வாங்க முடிவுசெய்தார், ஆன்லைன்னில் ஆர்டர் செய்தார்.
பணம் செலுத்தின பல நாள் பிறகும் சைக்கிள் டெலிவெரி ஆகவில்லை. இதனால் அந்த இணையத்தளத்தில் உள்ள கஷ்டமெர்-கேர் என்னை தொடர்பு கொண்டுள்ளார்.
அந்த எண்ணை அவர் தொடர்பு கொண்டபோது எந்த செல்போனில் இருந்து பணம் அனுப்பினீர்கள் மற்றும் கூகுள் பே அல்லது போன் பே எண்களை கேட்டுள்ளனர்.
சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு லிங்க் ஒன்று வந்திருக்கிறது. அந்த லிங்க்கை திறந்து அதில் கேட்கப்பட்ட விபரங்களை கொடுத்த சில வினாடிகளில் அவரது செல்போனுக்கு ஓடிபி எண் வந்திருக்கிறது. அந்த ஓடிபி எண்ணையும் அதில் பதிவு செய்துள்ளார்.
விளைவுபல தவணைகளாக யு.பி.ஐ., மூலம் அவரது வங்கிக்கணக்கில் இருந்து 93 ஆயிரத்து 169 ரூபாய் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லேக்கிகா கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.