உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     Coimbatore News      City news      இந்தியாவில் கூகுள் பே செயலிக்கு தடையா ?

இந்தியாவில் கூகுள் பே செயலிக்கு தடையா ?

   
இந்தியாவில் கூகுள் பே செயலிக்கு தடையா ?

கடந்த சில நாட்களுக்கு முன் இணையம் முழுக்க கூகுள் பே தடை செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்த செயலி ஆர்பிஐ விதிகளின் கீழ் செயல்படவில்லை. என்பிசிஐ எனப்படும் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் (The National Payments Corporation of India) கட்டுப்பாட்டின் கீழ் இது செயல்படவில்லை என்று செய்திகள் வெளியானது. இதையடுத்து டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அதில் கூகுள் பே பாதுகாப்பாக இல்லை. அதை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வழக்கில் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.என். படேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில் என்பிசிஐ விளக்கம் அளித்தது . என்பிசிஐ கூறியதாவது,
என்பிசிஐ என்பது இந்தியாவில் ஆன்லைன் மூலம் நடக்கும் பணபரிமாற்றங்களை கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகும். முக்கியமாக போன்பே, பேடிஎம், கூகுள் பே போன்ற யுபிஐ பரிமாற்றங்களை மேற்கொள்ள இந்த என்பிசிஐ கட்டுப்பாடுகளையும், அனுமதிகளையும் அளித்துவருகிறது.

கூகுள் பே தொடர்பாக என்பிசிஐ அளித்த விளக்கத்தில் கூகுள் பே என்பது மூன்றாம் தர பணப்பரிமாற்ற செயலி. கூகுள் பே என்பிசிஐ விதிகளை பின்பற்றி செயல்படுகிறது. கூகுள் பே செயலியானது யுபிஐ கீழ் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. முழு அனுமதியோடுதான் கூகுள் பே செயல்படுகிறது.

கூகுள் பே மூன்றாம் தர செயலி ஆகும். அதனால் என்பிசிஐயின் இணையத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்டண அமைப்பு பணப்பரிமாற்றாளர்கள் பட்டியலில் இந்த செயலி இடம்பெறவில்லை. மற்றபடி கூகுள் பே முழு அனுமதியோடுதான் செயல்படுகிறது.

ஆர்பிஐ கூகுள் பே செயலிக்கு தடை விதிக்கவில்லை. அதோடு இந்த செயலி மற்ற யுபிஐ செயலிகளை போலவே மிகவும் பாதுகாப்பான செயலி ஆகும்.

ஆர்பிஐ விதிகளுக்கு உட்பட்டே இதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது, என்று கூறி என்பிசிஐ விளக்கம் அளித்துள்ளது. இதனால் கூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதாக சமூக வலைதளத்தில் பரவிய செய்திகள் போலியான செய்தி என்பது தெளிவாக தெரிகிறது.


 மேலும் கூகுள் பே நிறுவனம் நாங்கள் அனைத்து விதிகளையும் பின்பற்றிதான் செயல்படுகிறோம். இதில் முறைகேடு எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

 

Related News