Home     Coimbatore News      City news      பால் பொங்கும் பச்சத்தண்ணி எப்படி பொங்கும் ?

பால் பொங்கும் பச்சத்தண்ணி எப்படி பொங்கும் ?

   
பால் பொங்கும் பச்சத்தண்ணி எப்படி பொங்கும் ?

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகி ஜீவ நதியாக ஓடிக்கொண்டிருப்பதுதான் நொய்யல் நதி. நொய்யல் ஆற்றில் மழைநீரை காண  கோவை மக்கள் ஆர்வமாக இருக்கும் சமயத்தில், தற்பொழுது மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

சூலூர் அருகே உள்ள பட்டணம் புதூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவும் சாக்கடைக்கழிவும்  நீருடன் கலந்து நுரையாக வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பட்டணம் புதூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் கருப்பு நிறத்திலும், காற்றில் பறக்கும் அளவிற்கு நுரையுடன் வந்து மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும், சாலையில் வருபவர்கள் மீது கழிவுநீர் நுரை காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுவதாகவும் மற்றும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் அவ்வழியே செல்ல மக்கள் அச்சப்படுகிறார்கள்

Related News