உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     Coimbatore News      City news      வாகன ஓட்டுனர்களுக்கு புதிய சட்டம்

வாகன ஓட்டுனர்களுக்கு புதிய சட்டம்

   
வாகன ஓட்டுனர்களுக்கு புதிய சட்டம்

இன்றைய காலகட்டத்தில் கனரக வாகனங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் படித்தவர்கள் யாரும் இந்த வேலைக்கு முன்வருவதில்லை. 8ம் வகுப்பு கூட படிக்காதவர்கள் தான் கனரக வாகனங்கள் ஓட்டுநராக இருக்கின்றனர். இக்காரணத்தினால் ஓட்டுனர் பற்றாக்குறை நீடிக்கிறது.

கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்க்கான கல்வித்தகுதியை நீக்க வேண்டும் என மத்திய அரசிடம் மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு ஓர் நட்செய்தி புதிய மோட்டார் வாகன சட்டதிருத்தத்தின் கீழ் இனி கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித்தகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் 8-ம் வகுப்பு வரை படித்தவர்கள் மட்டுமே கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது.

ஆனால் தற்போது 8-ம் வகுப்பு கல்வித் தகுதி தேவையில்லை என்பதை மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்த புதிய மோட்டார் வாகன சட்டம் தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது.

தமிழக போக்குவரத்து துறை கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற கல்வித்தகுதி சான்றிதழ்களை கேட்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதை பொது மக்களுக்குத் தெரியபடுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து அலுவலக அறிவிப்பு பலகையில் தெரியப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related News