உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     Coimbatore News      City news      உக்கடம் லாரிபேட்டை வெள்ளலூருக்கு மாற்றப்படுகிறது

உக்கடம் லாரிபேட்டை வெள்ளலூருக்கு மாற்றப்படுகிறது

   
உக்கடம் லாரிபேட்டை வெள்ளலூருக்கு மாற்றப்படுகிறது

கோவையில் வெளியூர் பேருந்துகள் நிற்பதற்கு ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி வெள்ளலூரில் தொடங்கப்படவுள்ளன, மேலும் அதன் அருகே லாரிபேட்டையும் அமைத்து உக்கடத்திலிருக்கும் லாரிபேட்டையை இடம் மாற்றப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். 

கோவை மாநகரத்தில்  போக்குவரத்து நெரிசலை அதிகம் உள்ளதால், அதனை தவிர்க்கும் வகையில் நகருக்கு வெளியே ரூ. 172 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. பல்வேறு நிதி நெருக்கடிகளின் காரணமாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது மாநகராட்சி ஆணையர் ஷரவன் குமார் முயற்சி மேற்கொண்டுள்ளார். 

செட்டிபாளையம் சாலையில் பேருந்து நுழைவாயில் அமைக்கப்படவுள்ள, இங்கு ஒரே நேரத்தில் 130  க்கும் மேல் பேருந்துகள் நிறுத்தும் வகையில் பேருந்து நிலையமும் மற்றும் இங்கு நகர பேருந்துகள், புறநகர்ப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் ஆகியவை வந்து செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ள.

மேலும் கொச்சின் பைபாஸ் சாலை வழியாக லாரிபேட்டையை அமைக்கப்படவுள்ளதையும் தெரிவித்துள்ளனர். 

இதுமட்டுமின்றி பேருந்து நிலையத்திற்கு அருகில் வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்ட வசதிகளை அமைக்கவுள்ளதாகவும் கோவை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். 

Related News