கமலை கொள்ள திட்டமா!         அஜித்துக்கு மீண்டும் விபத்து!         லாஸ்லியாவிற்கு இன்ப அதிர்ச்சி!!         வெளிவந்த வீடியோவின் காரணம்!        
Home     Coimbatore News      City news      சிறப்பு அம்சங்களுடன் சிவப்பு நிற பேருந்து

சிறப்பு அம்சங்களுடன் சிவப்பு நிற பேருந்து

   
சிறப்பு அம்சங்களுடன் சிவப்பு நிற பேருந்து

அரசு போக்குவரத்து கழகம் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 இடங்களில் 1700-க்கும் மேற்பட்ட வெளியூர் பேருந்துகள் மற்றும் 715 நகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இவைகளில் பல பேருந்துகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால் மாற்றப்பட்டு வருகின்றது. 

இந்த நிலையில் சென்னையில் இயக்கப்பட்டு வரும் சிவப்பு நிற நவீன பேருந்துகள் போன்று கோவையிலும் முதற்கட்டமாக புதிதாக 50 நவீன பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அந்த பேருந்துகள் வடிவமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோவை மாநகரில் தனியார் பேருந்துகளில் பல்வேறு வசதிகள் இருப்பதால் பயணிகள் விரும்பி பயணம் செய்கிறார்கள். எனவே அரசு சார்பில் இயக்கப்படும் பேருந்துகளிலும் நவீன வசதிகள் செய்ய முடிவு செய்யப்பட்டு மேலும் அதற்கான முயற்சியும் மேற்கொண்டுள்ளனர். 

அதன்படி முதற்கட்டமாக 50 நவீன பேருந்துகள் கோவை மாநகருக்கு வர உள்ளன. இதில் 10 பேருந்துகள் தற்போது கோவைக்கு வந்துள்ளது. 

புதிய பேருந்தில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் : 

  1. தானியங்கி கதவு.
  2. அவசர கால வழி.
  3. சென்சார் வசதி.
  4. தீயணைப்பு கருவி.
  5. தரமான இருக்கைகள்.
  6. எல்.இ.டி. விளக்குகள்.

மேலும் சில வசதிகள் பயணிகளுக்கேற்ப வடிவமைத்துள்ளனர். 
இந்த நவீன பேருந்துகளின் தொடக்க விழா விரைவில் நடக்க உள்ளது. இந்த புதிய பேருந்தின் குறைந்த பட்ச கட்டணம் ரூ.11 ஆகும். இதன் மூலம் கோவையில் சொகுசு பேருந்துகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 

Related News