Home     Coimbatore News      City news      சாதனைகளை தன்வசமாக்கிய கோவை அரசு மருத்துவர்கள்!!!!

சாதனைகளை தன்வசமாக்கிய கோவை அரசு மருத்துவர்கள்!!!!

   
சாதனைகளை தன்வசமாக்கிய கோவை அரசு மருத்துவர்கள்!!!!

"ஓப்பன் ஹார்ட்" அறுவை சிகிச்சை என்றாலே ஒரு வித அச்சம் எல்லோருக்கும் இருக்கும் ஆனால் நமது கோவை அரசு மருத்துவர்கள் இதயத்தின் இயக்கத்தை நிறுத்தாமல் அறுவை சிகிச்சை செய்து நோயாளிகளின் அச்சம் நீக்கி அசத்தினர்... கோவை அரசு மருத்துவமனையில் மாரடைப்பால் அனுமதிக்கப்பட்ட செல்வன் மற்றும் அப்துல்ரஹீம்மிக்கு கடந்த ஏப்ரல் 2-இல் நம் அரசு மருத்துவனை டாக்டர்கள் இதயத்தின் இயக்கத்தை நிறுத்தாமல் ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை நடத்தினர்.

இவ்வறுவை சிகிச்சையின் போது இதயத்தின் இயக்கம் மற்றும் நுரையீரலின் இயக்கம் நிறுத்தப்பட்டு "ஹார்ட்லங்க்" என்ற கருவி மூலம் மீண்டும் இயங்கவைப்பது வழக்கம். இவ்வாறு செய்வது பலவிதமான பக்கவிளைவை ஏற்படுத்தும் அதுமட்டுமல்ல, சிகிச்சை முடிந்த பின் உயிர் இழக்கவும் வாய்ப்புள்ளது.

இப்போது புதிய நடைமுறையில் உள்ள இதயத்தின் இயக்கத்தை நிறுத்தாமல் செய்யப்படும் அறுவை சிகிச்சை என்பது எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது எனவே இவ்வுத்தியை மேற்கொண்டனர் நமது கோவை அரசு மருத்துவர்கள்...

Related News