நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது !!!
கோவை விவசாயிகள் மகிழ்ச்சி
நொய்யல் நதி பாரம்பரியமான நதி, இந்த நதியை தூருவார பல ஆண்டுகளாக முயற்ச்சி செய்து வருகின்றனர். ஆனால் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேல் இந்த தூருவாரும் பணி நடைபெறவில்லை. தற்போதைய அரசு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கைக்கிணங்க நொய்யல் நதியை தூருவார ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள நொய்யல் ஆற்றின் 72.கிமீ நீளப்பகுதியை சீரமைக்க முடிவு செய்துள்ளது.
இந்த சீரமைப்பின் மூலம் நொய்யல் ஆற்றின் மொத்தமுள்ள 21 அணைக்கட்டு, வழங்கு வாய்க்காலின் மதகுகள், குளங்களுக்கு செல்லும் வாய்க்கால் அனைத்தையும் சுத்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது, மேலும் நீர் வரத்து பள்ளங்கள் புதுப்பித்தல், தடுப்பணை அமைத்தல், குளங்களை தூருவாருதல், ஆற்றினை தூருவாருதல், முற்போதர்கள் அகற்றுதல் போன்ற அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றது.
கோவை நொய்யல் நதிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்றது.