மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     Coimbatore News      City news      பெட்டிய கட்டுங்க தமிழர்களே!

பெட்டிய கட்டுங்க தமிழர்களே!

   
பெட்டிய கட்டுங்க தமிழர்களே!

பெங்களூரில் வேலை பார்த்தால் போதும் "லைப் செட்டெல்" என்று கூறும் தமிழர்களே சற்று கேளுங்கள். தொழிற்ச்சாலைகள், எம்.என்.சி கம்பெனி மற்றும் சுயதொழில் செய்யும் முதலாளிகள் அனைவரும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தாருக்கும் வேலை வழங்கி கொண்டிருந்தனர். "மொழி ஒரு தடையில்லை வேலைக்கு" என்று பலரும் கூறிக்கொண்டிருந்தனர். இப்போது நிலைமை மாறிவிட்டது கடந்த ஜூன் மாதத்தில் இருந்து சொந்த ஊரில் சொந்த மொழி பேசும் மக்களுக்கு 75 சதவீதம் வேலை வாய்ப்பு என்ற சட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்தது. ஆந்திர அரசு இதனால் ஆந்திர மக்கள் சுதந்திரமாக தெலுங்கு பேசலாம், ஆந்திர இளைஞர்களுக்கு வேலையில்லா திண்டாட்டமும் ஒளிந்துவிடும் என்பதை மையப்படுத்தி இச்சட்டத்தை நிறைவேற்றியது.  

இச்சட்டத்தின் தாக்கம் பெங்களூரிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது, பெங்களூரில் உள்ள இளைஞர்கள் மற்றும் மக்கள் அனைவரும் எங்களுக்கு சொந்த ஊரில் மதிப்பில்லை வேலை கிடைப்பதில்லை என்பதை அரசிற்கு வலியுறுத்தி வந்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கர்நாடக அரசு மசோதா ஒன்றை அமைத்து ஆந்திர மாநிலத்தின் சட்டத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தெரிய வருகின்றது. கர்நாடகாவில் உள்ள இளைஞர்கள் 15 வருட காலமாக கர்நாடகாவில் வசித்திருக்க வேண்டும், கன்னடம் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் இவர்களுக்கு மட்டும் தான் 75 சதவீத வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த சட்டம் கூடியவிரைவில் நிறைவேற்றப்படும் என்பதை கர்நாடக அரசாங்கம் கூறியுள்ளது.

Related News