Home     Coimbatore News      City news      ஜக்கி வாசுதேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா?

ஜக்கி வாசுதேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா?

   
ஜக்கி வாசுதேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா?

மருத்துவமனையின் கட்டிலில் தலைப்பாகை இல்லாமலும், கலைந்த தலையுடனும் ஜக்கி வாசுதேவ்(Jaggi Vasudev) மிக சோர்வுடன் படுத்து கிடக்கும் போட்டோ மற்றும் வீடியோவை இணையதளத்தில் பார்த்த அவருடைய பக்தர்கள் பதற்றமடைந்த நிலையில் உள்ளனர். 

பலருக்கு இவரை சத்குரு என்றால் தான் தெரியும் ஆனால் சிலருக்கு இவரது இயற்பெயர் ஜக்கி வாசுதேவ் என்பதும் தெரியும். பக்தர்களிடையே  ஞானி, யோகி, குரு என்றெல்லாம் திகழ்ந்து வருகிறார்.

ஜக்கி வாசுதேவ் கோவையில் நிறுவியுள்ள ஈஷா அறக்கட்டளை(Isha Foundation), மத சார்பற்ற, தொண்டு நிறுவனம் ஆகும். உலகில் பல இடங்களில் இந்நிறுவனம் யோகா நிகழ்ச்சிகளை ஈஷா அறக்கட்டளை வழங்கிக் கொண்டிருக்கிறது. இதுமட்டுமின்றி சமூக செயலிலும் ஈடுபட்டு வருகிறது இந்நிறுவனம். 

இந்நிலையில், இணையதளத்தில் ஒரு போட்டோ வெளியாகி உள்ளது. ஜக்கி வாசுதேவ் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பது போன்ற போட்டோ மற்றும் வீடியோ வெளியாயுள்ளது. உண்மையாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லையா ? இல்லை எதற்காக இந்த வீடியோ வெளியிட்டுள்ளீர்கள் காரணம் என்ன, என்று பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த போட்டோ உலகம் முழுக்க வைரல் ஆகி பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதனை மறுத்த ஈஷா அறக்கட்டளை, இது சுத்த பொய், ஜக்கி நலமாக இருக்கிறார் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் அவர் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எதற்கு இப்படி ஒரு போட்டோ வெளியானது என்று ஈஷா யோகா மையத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

 ஜக்கிக்கு உடம்பு சரியில்லை என்று செய்தி வந்தால், அவரின் புகழ் மேல் இருக்கிற திருஷ்டி கழிந்துவிடும். அதற்காகத்தான் இந்த செய்தி பரவியது என்று சமூகவலைத்தளங்களில் பேசிவருகின்றனர்.

திருஷ்டி கழிக்கும் இந்த முறையை புதிதாக அறிமுகப்படுத்தியது யார் என்று தெரியவில்லை. 

Related News