Home     Coimbatore News      City news      வேலை பார்க்கும் "இளைஞர்கள் கவனத்திற்கு"

வேலை பார்க்கும் "இளைஞர்கள் கவனத்திற்கு"

   
வேலை பார்க்கும்

வேலைக்காக போட்டி போட்டு ஓடிக்கொண்டிருக்கும் இளம் ஆண் மற்றும் பெண் யாராக இருந்தாலும் இவையனைத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடும் வாலிபர்களின் எண்ணிக்கை என்றுமே அதிகம். பணியாளராக இருந்து கொண்டே வேறு நல்ல பணியை தேடும் சிலரும் உண்டு.

கல்லூரி முடித்து விட்டு வேலைக்கு செல்லும் இளைஞர்களை சில கும்பல் தங்கள் வசம் இழுக்கின்றனர், அவர்கள் யார் என்று தெரியுமா போலி "Job Consultancy" தான். இவர்கள் வேலை தேடும் இளைஞர்களிடம் சில அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருகிறோம் மற்றும் உங்களுக்கு நேர்முக தேர்வு ஒன்று உள்ளது எங்களின் மேலதிகாரியோடு அதற்கு வரும் போது அனைத்து சான்றிதழையும் புகைப்படங்களையும் எடுத்து வர கூறுவார்கள். அதை நம்பிய அப்பாவி இளைஞர்கள் தங்களின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை எடுத்து சென்று காண்பித்து விட்டு நேர்முக தேர்வில் பங்கேற்பர். அங்கு உள்ள அதிகாரி உங்களுக்கு இந்த தகுதி குறைவாக உள்ளது அதை நிறைவேற்ற பயிற்சி வேண்டும் மேலும் முன்பணமாக நீங்கள் ரூபாய் இவ்வளவு கட்ட வேண்டும் என்றெல்லாம் கூறி அவர்களின் பணத்தை அபகரித்துவிட்டு பயிற்சி முடிந்தவுடன் நீங்கள் இன்னும் தகுதி பெறவில்லை கவனம் உங்களுக்கு அதிகம் தேவை என்றெல்லாம் கூறி நிராகரித்து விடுவார்கள், மற்றொரு கும்பல் நேர்முக தேர்விற்காக நீங்கள் இவ்வளவு முன்பணம் செலுத்த வேண்டும் என்று சொல்லி கைநீட்டிவிடுவார்கள் பணம் வாங்கி கொண்டு. 

Job Seekers


இவர்கள் இப்போது கையாளும் யுக்திகள்:

  • Indeed, Linked In, Nithra & Monster போன்ற வேலைதேடும் செயலிகளில் ஒரு விளம்பரம் செய்வார்கள்.
  • உங்களின் தொலைபேசி எண்ணை எடுத்து அழைத்து நீங்கள் இந்த நிறுவனங்களில் எல்லாம் தேர்வாக தகுதியுடையவர் என்று உங்களின் ஆசைகளை தூண்டுவார்கள்.
  • உங்களின் E-Mail Id-க்கு நேர்முக தேர்வு தேதி, தேர்வு நடக்கும் இடம் மற்றும் தொடர்புகொள்ள ஒரு தொலைபேசி எண்ணை உங்களுக்கு அனுப்புவார்கள்.
  • உங்கள் தொலைபேசி எண்ணிற்கு குறுந்தகவல்களாகவும் அனுப்புவார்கள்.


இவ்வாறு உள்ள போலி Job Consultancy-இல் நீங்கள் ஏமாறாமல் இருக்க முதலில் நீங்கள் பார்க்க வேண்டிய விஷயம் CIN Number பொதுவாக இந்த சான்றிதழை அவர்களின் வரவேற்பு அறையில் நீங்கள் காணலாம். மேலும் ஒரு நல்ல Job Consultancy என்றால் அவர்கள் உங்களிடம் பணம் செலுத்த சொல்லமாட்டார்கள்.
இவ்வாறு உங்களுக்கு நேர்ந்தால் நீங்கள் அருகில் உள்ள காவல்துறையில் குற்றம் சாட்டுங்கள்.

Police Station


அது அங்கீகரிக்க பட்ட நிறுவனம் என்றால் ROC-இடம் புகார் அளியுங்கள்.
"மேலும் கோவையில் சிறந்த Job Consultancy எங்கள் 123coimbatore.com என்ற online Directory-யில் உள்ளது".

தற்போது உங்கள் நிலை என்ன?

Related News