Home     Coimbatore News      City news      சென்னையை உலுக்கி வரும் பாலியல் சம்பவம்

சென்னையை உலுக்கி வரும் பாலியல் சம்பவம்

   
சென்னையை உலுக்கி வரும் பாலியல் சம்பவம்

தமிழகத்தில் பல இடங்களில் இந்த புதிய கலாச்சார சீரழிவு நடைபெற்று வருகிறது.
காம உணர்ச்சியை தூண்டக்கூடிய, " போதை மாத்திரை ". பல பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறி ? 

குறிப்பாக: சென்னையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான Pub இல் இந்த கலாச்சார சீரழிவு என்று சொல்லப்படும் உடல் உறவை தேடி வரும் ஆண்களுக்கு இந்த இடம் வசதியாகவே அமைத்திருக்கிறது. இந்த தவறானது வாரம்தோறும் புதன் கிழமையன்று நடைபெற்று வருகிறது. இங்கு வருபவர்கள் அனைவரும் சின்னத்திரை மற்றும் திரையுலகில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள். இந்த தவறுக்கு மூலதனமாக இருப்பது, வளர்ந்து வரும் இசையமைப்பாளர் ஆகும். இதற்கு துணையாக பல அரசியல் பிரமுகர் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இவர் தனக்கு தொடர்பிலிருக்கும் பெண்களை பார்ட்டிக்கு அழைப்பது போன்று அழைத்து அவர்களுக்கு Happy Pills என்ற காம உணர்ச்சியை தூண்ட கூடிய மாத்திரையை அறிமுகப்படுத்துவர். பின் அதனை மதுவில் அல்லது ஜூஸில் கலந்து குடிக்க செய்வர். சிறிது நேரத்திலேயே அந்த மாத்திரை வேலை செய்ய தொடங்கி விடும், அந்த இசையமைப்பாளர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அந்த பெண்ணை தனது இச்சைக்கு பயன்படுத்திக்கொள்வார்கள்

இது போன்று பல பெண்களை இழிவுபடுத்தியது மட்டுமில்லாமல், அவர்கள் சுயநினைவை இழந்து இருக்கும் அந்த நேரத்தில் அவர்களுக்கே தெரியாமல் ஆபாசமாக படம் எடுத்து, அவர்களை மிரட்டி மீண்டும் மீண்டும் உடல் உறவுக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனால் பல பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி விபரீத முடிவுகள் எடுத்துள்ளனர். பலர் இந்த பழக்கத்தில் இருந்து வெளிவர முடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள். 

இந்த தவறு போலீசாருக்கு தெரிந்தும் அவர்களால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை ஏன் என்றல், இதில் சம்மந்தப்பட்டவர்கள் பெரிய அரசியல் வாதிகளும் மற்றும் அவர்களது நண்பர்கள் தான். இதில் பாதிக்க பட்டவர்கள் யாராவது புகார் தெரிவித்தால் கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

மேலும் அந்த இசையமைப்பாளர் மற்றும் Pub இன் உரிமையாளரை போலீசார் பின்தொடர்ந்து வருவதாகவும், தகுந்த சாட்சிகள் மற்றும் ஆதாரங்களுக்காக காத்திருப்பதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர் 

Related News