சீன நாட்டில் இருந்து வௌவால் கரி சாப்பிட்டதின் விளைவால் ஏற்பட்ட வைரஸ் தான் கொரோனா. இந்த நோயால் பலரும் உயிரிழந்தனர். மேலும் இந்த நோய் நமக்கு வர வாய்ப்பில்லை என்று அலட்சியமாக இருந்த காலமும் உண்டு. அதற்கு பின்னர் லாக்டவுன் போடப்பட்டு பலரும் வீட்டிற்குள் முடக்க பட்டனர். 2019யில் ஆரம்பமான வைரஸ் இன்னும் ஓயவில்லை.
தற்போது பிரிட்டனில் குரங்கு அம்மை நோய் பரவ தொடங்கியுள்ளது. பிரிட்டனில் இருந்த ஒருவர் நைஜீரியா நாட்டிற்கு சென்று விட்டு லண்டன் வந்து சேர்ந்துள்ளார். அவருக்கு இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் நெருங்கி இருந்தவர்களுக்கும் இந்த நோய் தொற்று இருக்கலாம் என்ன அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவருக்கு அருகில் அமர்ந்தவர்களின் முகவரிகளையும் திரட்டிவருகின்றனர். அதே நிலையில் லண்டனில் ஒரே குடும்பத்தாருக்கு குரங்கு அம்மை பரவியுள்ளது. இந்த வைரஸ் உடனடியாக குணமடையும், மேலும் இது எளிதில் பரவக்கூடிய தொற்று அல்ல. நோய் இருப்பவருடன் நெருங்கி பழகினாலே இந்த வைரஸ் பரவும்.
குரங்கு அம்மை வந்தால் வரக்கூடிய அறிகுறிகள் காய்சல், தலைவலி, தசை வலி, முதுகுவலி, குளிர் மற்றும் சோர்வு. இந்த வைரஸ் கண், மூக்கு, வாய் போன்றவற்றின் மூலம் பரவுகிறது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளை உண்பதன் மூலம் குரங்கு அம்மை நோய் பரவி இருக்கலாம் என யூகித்துள்ளனர்.