வெளிவந்த முத்த காட்சி ரகசியம்!         தயாரிப்பாளரால் நடிகை மனஉளைச்சல்!         ரகசிய திருமணமா மீரா மிதுனுக்கு!!         கமலை கொள்ள திட்டமா!         லாஸ்லியாவிற்கு இன்ப அதிர்ச்சி!!        
Home     Coimbatore News      City news      எச்சி துப்பினா ஆயிரம் ரூவா அபாரதமா !!

எச்சி துப்பினா ஆயிரம் ரூவா அபாரதமா !!

   
 எச்சி துப்பினா ஆயிரம் ரூவா அபாரதமா !!

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையிலும், சுகாதாரத்தை காக்கவும் மாவட்ட நிர்வாகம்  பல்வேறு சட்டங்களை புதிதாக அமல்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி அமைப்புகளின் கூட்டத்தில் பொது இடத்தில் எச்சில் துப்ப தடை விதிக்கபட்டுள்ளது என்றும் மீறுபவர்களுக்கு ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதைக்குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா (Innocent Divya) அவர்களிடம் கேட்ட போது அவர் புகையிலை பான்மசாலா குட்கா வெற்றிலை பாக்கு போன்ற பொருட்களை மென்று பொது இடங்களில் துப்பினால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்! இதை கண்காணிக்க உள்ளாட்சி அமைப்பினர் ஈடுபடுவார்கள் என்று கூறியுள்ளார். ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் குளிர்பான பாட்டில்கள் பயன்பாடு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் மக்களும் சுற்றுலா பயணிகளும் இந்த உத்தரவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 

Related News