இயக்குனர்களுக்கு அதற்கு பச்சை கொடி!!         ரைசா செய்த காரியும்!         விவாகரத்து செய்யவே நாடகம்!!         பாலிவுட்டில் விரட்டப்பட்ட தமிழ் நடிகை!         பொள்ளச்சி இளைஞர்களுடன் லாஸ்லியா!!        
Home     Coimbatore News      City news      சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தவேண்டாம்

சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தவேண்டாம்

   
சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தவேண்டாம்

தேசிய நெடுஞ்சாலைகளில் 4 வழி, 6 வழிச்சாலை திட்டங்கள் செயல்படுத்தி அங்கு சுங்கச்சாவடிகள் அமைத்து வாகனங்கள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி ரசீதை பெற்ற பின்னரே அவ்வழியில் செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. இதனால் சுங்கச்சாவடிகளில் ரசீதை பெற வாகனங்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியநிலை உள்ளது.

இதற்கு தீர்வு காண பாஸ்டேக் என்ற திட்டத்தை மத்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் செயல்படுத்தி உள்ளது. இந்த ‘பாஸ்டேக்’ திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும் அது முழுமையாக செயல்படுத்தவில்லை. தற்போது இந்த திட்டத்தை ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் 5 வழிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

வாகனங்களின் முன்புறம் பாஸ்டேக் அனுமதிக்கான கார்டை ஒட்டி வைத்திருக்க வேண்டும்.

fastag image

வாகன உரிமையாளர்கள் சுங்கச்சாவடிகளை எத்தனை முறை கடந்து செல்வார்களோ அதற்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்தி கொள்ளலாம். 
குறைந்தபட்சம் ரூ.150.
அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்.

இந்த கட்டணம் செலுத்தி இந்த கார்டை பெற்று கொள்ளலாம். கடந்து செல்வதை கணக்கிட்டு அதற்கு தகுந்தவாறு கட்டணங்கள் கழித்துக்கொள்ளப்படும். பாஸ்டேக் கார்டில் இருக்கும் தொகை தீர்ந்த பின்னர் மீண்டும் ரீசார்ஜ் செய்வது போல் கட்டணதொகையை பதிவேற்றிக்கொள்ளலாம்.

Related News