கமலை கொள்ள திட்டமா!         அஜித்துக்கு மீண்டும் விபத்து!         லாஸ்லியாவிற்கு இன்ப அதிர்ச்சி!!         வெளிவந்த வீடியோவின் காரணம்!        
Home     Coimbatore News      City news      சார்ஜர் கேபிள் மூலம் டேட்டாக்கள் திருட்டு - உஷார் !

சார்ஜர் கேபிள் மூலம் டேட்டாக்கள் திருட்டு - உஷார் !

   
சார்ஜர் கேபிள் மூலம் டேட்டாக்கள் திருட்டு - உஷார் !

விலை உயர்ந்த ஐபோன்(Iphone) குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்க்காக போலியான ஐபோன் மற்றும் அதன் சார்ஜர்(Charger) கேபிள் போன்றவற்றை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. தரம் குறைந்த போன், சார்ஜ் கேபிள் வாங்குவதால் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டு டேட்டாக்களை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனிலிருந்து எளிய முறையில் திருட வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர். 

சைபர் பாதுகாப்பின் நிபுணர்களான DEF CON மற்றும் ஒயிட் ஹேட் ஹேக்கர்ஸ் ஆகியவை அளித்துள்ள தகவலின்படி ஆப்பிள் ஐபோன் சார்ஜர் போன்றே காணப்படும் போலி சார்ஜர் கேபிள் மூலம் தனிநபர் சம்பந்தபட்ட தகவல்கள் மற்றும் தொழில் சார்ந்த அனைத்து தகவல்களையும் யார் அனுமதியுமின்றி ஹேக் செய்து கையாளமுடியும் என்று தெரிவித்துள்ளனர் மேலும் கம்ப்யூட்டரை டேமேஜ் செய்வது உள்பட பல முறைகேடுகளை செய்வதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.


சார்ஜர் கேபிளில் எப்படி டேட்டாக்களை திருட முடியும் என்று பலருக்கு சந்தேகம் உள்ளது. இந்த போலியான கேபிளின் உள்பக்கத்தில் ஹேக்கர்கள் தகவல்களை திருட ஒரு சிப் பொருத்தியுள்ளதாகவும், அந்த சிப் மூலமாக தான் நமது தகவல்கள் அவர்கள் திருடுவதாக தெரிய வந்துள்ளது. 

இந்த போலி சார்ஜர்கள் மற்றும் மொபைல் போன்கள் பார்ப்பதற்கு ஒரிஜினல் போன்றே இருக்கும். ஆனால் சிறு சிறு வித்தியாசங்கள் காணப்படும். எனவே தவறான கேபிளை பயன்படுத்தி உங்கள் டேட்டாக்களை இழப்பதில் இருந்து நீங்கள் தப்பித்து கொள்ள வேண்டும். டேட்டாவை டிரான்ஸ்பர் செய்யும் போது இதுபோன்ற போலி கேபிள்களை பயன்படுத்த வேண்டாம் என சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
இதுகுறித்து ஆப்பிள் நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந்த பிரச்சனையில் இருந்து தீர்வுகாணும் வழிகள்  :

  1. ஒரிஜினல் சார்ஜர் கேபிள்களை ஆப்பிள் ஸ்டோரில் இருந்து வாங்க வேண்டும் (குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக போலியான எதையும் வாங்க வேண்டாம்).
  2. அதேபோல் யூஎஸ்பியில் கனெக்ட் செய்யாமல் பெரும்பாலும் வயர்லெஸ் மூலம் கனெக்ட் செய்வதும் நல்லது. தனிநபர் ஒருவருடைய தகவல்களை திருட யாருக்கும் உரிமை இல்லை, மேலும் நாம் அதற்கு இடம் அளிப்பதை தவிர்க்கவும்.
  3. எனவே அடுத்தமுறை உங்கள் மொபைல் போனுக்கோ அல்லது கம்ப்யூட்டருக்கோ கேபிள் வாங்கும்போது ஒருமுறைக்கு இரண்டு முறை நன்றாக யோசித்து ஒரிஜினல் கேபிள்களை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள். 
  4. அதனால் உங்கள் தகவல்கள்(Data) மட்டுமின்றி மொபைல் போன், கம்ப்யூட்டருக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.

Related News