விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     Coimbatore News      City news      கோவைக்கு வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

கோவைக்கு வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

   
கோவைக்கு வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

கோவைக்கு வந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

கோவை: ஹரியானா மாநிலத்தில் உள்ள முகேஷ்போர் பகுதியில் உள்ள ஸ்டேடியத்தில் கடந்த ஜனவரி 31 பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் சிலப்பம், யோகா, கராத்தே, கால்பந்து, கைப்பந்து, கபடி, தடகளம், ஹாக்கி, போன்ற பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் நமது கோவை சூலூரை சேர்ந்த ரௌத்திரா அகாடமியில் பயிற்சி பெறும் மாணவ மாணவியர்கள், தமிழக அணி வீரர்களுடன் கலந்து கொண்டு சிலம்பப் போட்டியில் பங்கேற்றனர். இவர்களுக்கு ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கம்பு, சுருள்வாள், தொடும் முறை, மான் கொம்பு, போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கோவை வீரர்கள் 20 பேர் தங்கப்பதக்கம், 4வெள்ளிப் பதக்கமும், 3 வெண்கல பதக்கமும் பெற்றனர். மேலும் யோகா போட்டியில் மதிவதனி என்ற மாணவி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இது மாநிலத்திற்கும், ஊருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது. அவ்வாறு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள், நேற்று இரவு ரயில் மார்க்கமாக கோவை ரயில் நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் சார்பாக மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி பெருமை சேர்க்க பட்டது.

Related News