Home     Coimbatore News      City news      இளைஞர்களின் கதாநாயகன் ஐயா அப்துல் கலாம்!!!

இளைஞர்களின் கதாநாயகன் ஐயா அப்துல் கலாம்!!!

   
இளைஞர்களின் கதாநாயகன் ஐயா அப்துல் கலாம்!!!

தமிழ்நாட்டின் பெருமையாக ஐயா அப்துல் கலாம் அவர்களை கருதுவதில் தவறில்லை , ஏனெனில் உலகின் தலை சிறந்த ஆராய்ச்சி நிறுவனம் என்றால் அது நாசா தான் .ஆனால் ஐயா அவர்கள் அந்த நிறுவனத்தில் பணிபுரிய வந்த வாய்ப்பை நிராகரித்தார் காரணம் என் கல்வி நான் கற்ற நாட்டிற்கு மட்டுமே பயன் பட வேண்டும் என்பதில் உறுதியாக இறுதி வரை இருந்தார்.

ஐயா ஒன்றும் (பணக்காரர்கள் படிக்கும் கோடிகளை விழுங்கும் )ஆங்கில வழி பள்ளியில் படிக்கவில்லை. ஏழைகளின் கற்பக விருட்சம் ஆகவும் அரசியல்வாதிகள் சம்பாதிக்க வைத்திருக்கும் காரணமான அரசாங்க பள்ளியில் எண்ணற்றவர்கள் அழிக்க காத்திருக்கும் உலகின் ஆதி மொழியான தமிழ் மொழியில் பயின்றவர்.

வரலாற்றில் இடம் பெற்றவர்கள் அனைவரும் இளம்வயதில் எண்ணற்ற துயரங்களை சந்தித்தவர்களே. இதில் ஐயாவும் விதி விளக்கல்ல , பள்ளி பருவத்தில் செய்தித்தாள்களை வீடு வீடாக சென்று போடும் வேலைகளை பார்த்து தான் கல்வியே பயின்றார்.

APJAbdulKalam

மதங்களை ஏனோ இவர் ஏற்கவில்லை உணவை இவருக்கு அளித்தவர் ஒரு இந்து. பிறப்பால் ஐயா இஸ்லாமிய மார்க்கத்தை சார்ந்தவர். இவர் அதிகமாகவும் தனக்கு பிடித்த நூலாகவும் கூறுவது பகவத் கீதையை.
ஆராய்ச்சியாளராகவே  தன் பணியை தொடங்கினார் அவரின் உழைப்பும் உண்மையும் அவரை இந்திய திருநாட்டின் முதன்மை குடிமகனாக கருதப்படும் குடியரசு தலைவர் என்னும் பதவியில், ( பதவிகளுக்காக அடித்து கொள்ளும்) அனைத்து கட்சிகளும் ஒரே மனதாக ஐயாவை தேர்வு செய்து அமர வைத்தது.

abdul kalam famous quotes

பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரம் ஆக இருக்க வேண்டும் என்று கூறியவர் இறுதியில் தனது இறப்பை சரித்தரமாகவே  மாற்றி இருக்கிறார். சாதி, மதம் என எதையும் பாராமல் நினைத்து கண்ணீர் சிந்த வைத்த “ஏவுகனை நாயகன்” சரித்திரமே !!!

ஐயா அவர்களின் நினைவு தினத்தில் அவரின்  அஞ்சலியில் 123Coimbatore நிறுவனமும் பங்கு கொள்கிறது.
“கனவுகள் மெய்ப்பட வேண்டும்”

Join us in #APJAbdulKalam 

Related News