திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.வேலுசாமி அவர்கள் , அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் பாதையை மாற்றுவதற்காக ரயில்வே அமைச்சர் திரு. ஸ்ரீ அஸ்ஹவினி வைஷ்ணவிடம் கோரிக்கைக் கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது அம்ரிதா எக்ஸ்பிரஸ் செல்லும் ரயில் பாதை திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு 16343/16344 ரயில் என் கொண்டு இயங்கி வருகிறது.
அவர் கடிதத்தில் ,ரயில் சேவை பாலக்காட்டில் இருந்து கோவைக்கு திருப்பி விடப்பட்டால், பழனி, ஒட்டஞ்சாதாரம், திண்டுக்கல், கோடை ரோடு,மதுரை ஆகிய இடங்களில் இருந்து செல்லும் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது பயணம் செய்யும் பயணிகள் ,யாத்ரிகள் மற்றும் வணிகர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாற்றத்தினால் ரயில் நேரம் மற்றும் வருகைக்கு கூடுதல் நேரம் எடுக்கும். இருப்பினும் இது பொதுமக்களுக்கு பெரும் அளவில் பயனுள்ளதாக அமையும்.
ஒட்டுமொத்தமாக இந்தச் செயலாக்கத்தின் காரணமாக அதிக நன்மை உள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி ரயில் வருவாய் துறையில் கூடுதல் வருவாய் பெறுவார்கள்.
-தாணு தமிழ்செல்வன்