வெளிவந்த முத்த காட்சி ரகசியம்!         தயாரிப்பாளரால் நடிகை மனஉளைச்சல்!         ரகசிய திருமணமா மீரா மிதுனுக்கு!!         கமலை கொள்ள திட்டமா!         லாஸ்லியாவிற்கு இன்ப அதிர்ச்சி!!        
Home     Coimbatore News      City news      சகஜ நிலைக்கு திரும்பும் கோவை

சகஜ நிலைக்கு திரும்பும் கோவை

   
சகஜ நிலைக்கு திரும்பும் கோவை

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை மையமாக கொண்டு  விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலை நடத்த இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து லஷ்கர் இ தொய்பா (எல்இடி) திவரவாத இயக்கத்தை சேர்ந்த 6 பயங்கரவாதிகள்  தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

கடந்த 4 நாட்களாக அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தீவிரமான கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

கோவை மக்கள் கடந்த 4 நாட்களாக பெரும் பீதியை சந்தித்த நிலையில் இன்று சகஜ நிலைக்கு வந்துள்ளனர். இருப்பினும் போலீசார் கோவை மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் பலத்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

வரும் திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை ஒட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News