உலகில் பரவலாக பரவி வரும் கொரோன நோயை பார்த்து உலக நாடுகள் அச்சம் கொள்ளும் இந்நேரத்தில், இந்தியாவிலும் இந்நோய் பரவி வருவதை பார்க்கும் போது நம் அனைவரின் கண்கலங்க தான் செய்கின்றது. வடஇந்தியாவில் அதிகம் பரவிய இந்நோய் இப்போது தென்இந்தியாவில் அதும் நம் தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது. தினம் தோறும் பலரின் உயிரை குடிக்கும் இந்த கொரோனவை தடுக்க நம் இந்தியா கடுமையாக போராடி வருகின்றது.
இந்தியா மட்டுமின்றி வேறுநாடுகளிலும் வெளிநாட்டில் இருந்து வரும் நபர்களை அந்நாட்டின் அரசு மருத்துவ கண்காணிப்பில் வைத்து தீவிர பரிசோதனையின் பின்னரே நாட்டினுள் அனுமதிக்கின்றனர். இப்போது இத்தாலியில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோன வந்தால் சிகிச்சை செய்ய வேண்டாம் என்று அந்நாட்டின் அரசு அறிவித்துவிட்டதாம். இடுகாடு 24 மணிநேரமும் இயங்கிக்கொண்டுள்ளதாம். 30 பேர் அனுமதிக்க படவேண்டிய மருத்துவமனைகளில் 3000 பேருக்கு அனுமதி தரப்படுகின்றதாம். இதை பார்த்து அந்நாட்டின் பிரதமர் மக்கள் மத்தியில் எங்களை காப்பாற்ற யாருமே இல்லையா? என்று கண்ணீர்விட்டுள்ளார்.
அத்தனை பாதுகாப்புடைய இத்தாலிக்கு இந்த நிலைமை என்றால் நம் இந்தியா என்ன ஆகா போகிறது. கொரோனவை தடுக்க இந்திய அரசு அறிவிக்கும் அனைத்து கட்டளைகளையும் மக்கள் பின்பற்றுவது மிக அவசியம்.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோவையில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது, சாலைகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது, மக்கள் நடமாட்டம் இல்லாமல் வீதி மயான காட்சியளிக்கின்றது, மழையின் காரணத்தினால் குளிர் சூழ்ந்து இருமல், காய்ச்சல் மற்றும் சளி போன்ற நோய் எளிதில் வந்துள்ளது.
குளிரான இடங்களில் கொரோன பரவும் என்று கூறிவந்தனர் மக்கள், இப்போதோ சுட்டெரிக்கும் வெயில் கொரோனவிற்கு ஏதுவாக மழையை பொழிகின்றது. இதை பார்த்து பலர் கொரோனவிற்கு கடவுளின் துணை உள்ளது என்று கேலியாக கூறிவருகின்றனர்.