பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றப்படுகிறதா ?         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         சூடுபிடிக்கும் பிக்பாஸ் 5 போட்டியாளர்களின் பட்டியல்         பிக்பாஸ் 5வது சீசன் பற்றிய அப்டேட் ! எப்போ தொடங்கப்போகிறது தெரியுமா ?         நடிகர் தனுஷ் கட்டும் புதிய வீட்டின் மதிப்பு.. இவ்வளவா ??         ஷிவானி உடனான அந்த உறவு? அஸீம் பளீச்..         "பிக்பாஸ் முகென்" அடுத்த பட அறிவிப்பு         பாலா எனக்கு வருவிய நீ ஆளா**         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     Coimbatore News      City news      ஒரே நாளில் இது வரை இல்லாத அளவில் தமிழகத்தில் பாதிப்பு

ஒரே நாளில் இது வரை இல்லாத அளவில் தமிழகத்தில் பாதிப்பு

   
ஒரே நாளில் இது வரை இல்லாத அளவில் தமிழகத்தில் பாதிப்பு

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,244 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழகத்தில் கொரோனாவின்  ஆதிக்கம் அதிகரிப்பதை தெளிவாக காட்டுகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்த 15 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 27 பேருக்கும் நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் நேற்று மொத்தம் 1,286 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இது மேலும் மேலும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 787 ஆண்களும், 498 பெண்களும், 3-ம் பாலினத்தவர் ஒருவரும் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 27 மாவட்டங்களில் புதிதாக நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.  இதில்,


சென்னையில் - 1,012 பேரும் , செங்கல்பட்டில் - 61 பேரும்
திருவள்ளூரில் - 58 பேரும் ,  திருவண்ணாமலையில் - 21 பேரும்
காஞ்சீபுரத்தில் - 19 பேரும் ,  தூத்துக்குடியில் - 17 பேரும்
தூத்துக்குடியில் - 17 பேரும்,  நெல்லையில் - 12 பேரும்
கோவையில் - 9 பேரும் ,       மதுரையில் 7 பேரும்,


கடலூர், தஞ்சாவூரில் தலா 6 பேரும், ராமநாதபுரம், ராணிப்பேட்டையில் தலா 5 பேரும், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், வேலூரில் தலா 4 பேரும், சேலத்தில் 3 பேரும், திருவாரூரில் 2 பேரும், தர்மபுரி, கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தேனி, விழுப்புரம், விருதுநகரில் தலா ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 610 பேர் நேற்று குணமடைந்தனர். தமிழகத்தில் இதுவரை 14 ஆயிரத்து 316 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழக மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு 11 ஆயிரத்து 345 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Related News