கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்த படம்!         மகேஷ் பாபு சவாலை ஏற்ற விஜய்!         அதிர்ச்சியான ஹரிஷ் கல்யான் ! காரணம் ?         மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கும் தனுஷ்!         நடிகர் சூர்யா குடுத்த சரியான பதிலடி!!!         தேவதை போல் காட்சியளிக்கும் லொஸ்லியா !!!         மாஸ்டர் படத்தின் சண்ட காட்சிகள் பற்றி தகவல்         விஜய்க்கு ஜோடியாக புது ஹீரோயின் ஆஹ்!        
Home     Coimbatore News      City news      கொரோனாவிற்கு உண்மையான மருந்து ரெடி!!!

கொரோனாவிற்கு உண்மையான மருந்து ரெடி!!!

   
கொரோனாவிற்கு உண்மையான மருந்து ரெடி!!!

 

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் சுமார் 195 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடான அமெரிக்காவே விழி பிதுங்கி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கடும் தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தேதியில் உலகளவில் கொரோனாவால் 3 லட்சம் பேர் பாதிப்பும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  உயிர் இழந்தும் உள்ளனர். இந்த சூழ்நிலையில் கொரோனாவிற்கு மருந்து ரெடி என்ற தகவல் கிடைத்துள்ளது.  
இஸ்ரேல், சீனா, அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கிட்ட தட்ட மருந்து கண்டுபிடிப்பின் கடைசி கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மலேரியாவிற்கு பயன்படுத்தகூடிய ஹைட்ராக்சிக் குளோரோ குயின் என்ற மருந்தை பரிந்துரை செய்துள்ளது. 

இந்தியாவில் கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சிக் குளோரோ குயின் என்ற மருந்தை பயன்படுத்தலாம் என அதிகார்வப்பூர்வமாக அனுமதி வழங்கி உள்ளது. இந்த மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பயன்படுத்த கூடாது என்றும் மிக தீவரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும்  கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

 
கொரோனாவிற்கு மிக சிறந்த மருந்து "தனிமை படுத்துதல்" என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. இந்திய மருத்துவ நிபுணர்கள் மட்டுமல்லாமல் உலகின் தலைசிறந்த மருத்துவ  நிபுணர்கள் அனைவருமே கூறும் ஒரே மருந்து தனிமை படுத்துதல். இதுதான் தற்போது அனைவர்க்கும் சிறந்த மருந்து என்றும் கூறியுள்ளனர்.

இதனால் மக்கள் அனைவரும் 2 அல்லது 3 வாரங்கள் வீட்டுலயே முடங்கி கிடந்தாள் கொரோனா பரவுவதை 70 சதவீதம் தடுக்கலாம். மேலும் கொரோனா பரவும் சங்கலித் தொடர் உடைக்கப்பட்டால் முற்றிலுமாக நோய் கட்டுப்படுத்தப்படும். மேலும் பாதிக்கப்பட்டவர்களையும் சுலபமாக காப்பாற்றிவிடலாம் என்றும் கூறுகின்றனர்.


கொரோனாவிற்கு தடுப்பு மருந்து மற்றும் முற்றிலுமாக குணப்படுத்தகூடிய மருந்து கண்டுபிடிக்க 13 மாதங்களிலிருந்து 14 மாதங்கள் வரை ஆகலாம் என்று உலகின் தலைசிறந்த மருத்துவ  நிபுணர்கள் கூறுகின்றனர். 


"தற்போது கொரோனாவிற்கு மிக சிறந்த மருந்து தனிமை படுத்துதல்."


 

Related News