கோவை: உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவி வரும் இச்சூழலில், மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள லாக்டவுன் விதிகளை மீறி கூட்டம் கூட்டியதாக கூறி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மற்றும் கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வகுமார், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில துணை தலைவர் கனகசபாபதி உள்ளிட்ட 5 நபர் மீது காட்டூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, இளைஞர்கள் பாஜகவிற்கு அதிக அளவில் வாக்களிப்பார்கள் என்று கூறினார்.
பாஜக வில் இணைந்து அண்ணாமலை, முதல் நாள் நேற்று கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் வருகை தந்ததற்க்கே, அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது 'பாஜக'வினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.