கோவை: கோவையில் கொரோனா கணக்கெடுப்பு பணி செய்வதற்கு 1,500 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். ஒரு வார்டுக்கு 15 பேர் வீதம் மொத்தம் 1,500 பேர் நியமிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, வீடுவீடாக கணக்கெடுப்பு பணி செய்வதற்கு ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
- இந்த கணக்கெடுப்பு பணியில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனரா ?
- வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் யாரேனும் உள்ளனரா ?
- வீட்டில் 60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள் உள்ளனரா ?
- அவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதா ? மற்றும் வேறு நோய் தொற்று பாதிப்புகள் இருக்கிறதா போன்ற விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்தார்.