மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     Coimbatore News      City news      ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு

ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு

   
ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு

நீலகிரி(Nilgiri) மாவட்டத்தில் மே மாதம் நடைபெற இருக்கும் கோடை விழாவிற்கு உள்ளூர், வெளியூர்களில் இருந்து அதிகப்படியாக வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்கேற்ப வருகிற 15.04.2019 முதல் 31.05.2019 வரையிலும், அனைத்து நாட்களிலும் (24*7) காவல் துறையினரால் கீழ்கண்ட பாதைகள்  ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. 

                          

   1) மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.    

   2) உதகையிலிருந்து  கோவை(coimbatore) மற்றும் மேட்டுப்பாளையம்(Mettupalayam) செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். எக்காரணம் கொண்டும் பர்லியார்(Burliar) வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது. குன்னூரிலிருந்தும்(coonoor) அனைத்து வாகனங்களும் கோத்தகிரி(Kotagiri) வழியாகவே திருப்பிவிடப்படும்.       

   3) மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரும் அனைத்து லாரிகளும் காலை 06:00 am முதல் இரவு 09:00 pm மணிவரை கோத்தகிரி வழியாகவும், பர்லியார் வழியாகவும் அனுமதிக்கப்பட மாட்டாது. லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் காவல்துறைக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் ஒத்துழைப்பு தருமாறு வேண்டப்படுகிறது.        

        இந்த போக்குவரத்து மாற்றங்கள் (15.04.2019) திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் 

Related News