பிக்பாஸ் முகின் ராவ் நடிக்கும் முதல் படம் !         பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடித்த ஜாக்பாட் !         கமலின் 8 வேடத்திற்கு டப்பிங் பேசி அசத்திய எஸ்.பி.பி.         பிக்பாஸ் தொடங்கும் நாள் இதோ !         விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     Coimbatore News      City news      சீன எல்லையில் அமெரிக்கா போர் படைகள்

சீன எல்லையில் அமெரிக்கா போர் படைகள்

   
சீன எல்லையில் அமெரிக்கா போர் படைகள்

தென் சீன கடல் பகுதியில் திடீர் என்று அமெரிக்கா போர் கப்பல்கலை குவித்து வருகிறது. இது  சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியா - சீனா இடையே பிரச்சனை நிலவி வரும் நிலையில் தற்போது தென் சீன கடல் எல்லையில் அமெரிக்கா படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. இது போர் சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. இதனால் சீனா கடும் பீதியில் உள்ளது.

american navy ship

தென் சீன கடல் எல்லையில் அமெரிக்கா படைகளை குவித்து வருவதாக சீனாவே ஒப்புக்கொண்டு உள்ளது. சீனாவின் தென் கடல் எல்லையை யார் சொந்தம் கொண்டாடுவது என்று சண்டை  பல வருடமாக நடந்து வருகிறது. தற்போது இந்த சண்டை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு அமெரிக்கா தனது காலடி தடத்தை பதித்துள்ளது.

american force


தென் சீன கடல் எல்லையில் இருக்கும் அதிக அளவு எண்ணெய் வளம்தான் இதற்கு காரணம் ஆகும். அங்கு அதிக அளவில் இருக்கும் எண்ணெய்க்கு யார் சொந்தம் கொண்டாடுவது என்று போட்டி நிலவி வருகிறது. இந்த கடல் தனக்குத்தான் சொந்தம் என்று சீனா கூறுகிறது. இங்கு சீனா ஏற்கனவே சின்ன சின்னதாக தீவுகளை அமைத்து வருகிறது. அங்கு ராணுவத்தையும் சீனா குவித்து வந்தது.

china force

இந்நிலையில் அமெரிக்கா போர் கப்பல் குவிந்ததால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. அதே சமயம் இந்த கடலை ஒரு பக்கம் மலேசியா சொந்தம் கொண்டாடுகிறது. இன்னொரு பக்கம் வியட்நாம் சொந்தம் கொண்டாடுகிறது.

இங்கு மற்ற நாடுகளின் எல்லைக்குள் சீனாவின் போர் கப்பல்கள் அவ்வப்போது அத்துமீறுவது வழக்கமாகி வருகிறது. முக்கியமாக மலேசியாவின் எண்ணெய் கிணறுகள் இருக்கும் பகுதியில் சீனாவின் போர் கப்பல்கள் அவ்வப்போது அத்துமீறி வருகிறது.  இதைத்தான் தற்போது அமெரிக்கா தட்டிக்கேட்க தொடங்கி உள்ளது.

american navy ship

அங்கு தற்போது அமெரிக்கா தனது போர் கப்பல்களை, ஏவுகணைகளை, ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை களமிறக்கி உள்ளது. இதை சீனாவே ஒப்புக்கொண்டுள்ளது. தென் சீன கடல் எல்லையில் அமெரிக்கா ஆக்கிரமித்துள்ளது என்று சீனா ஒப்புக்கொண்டு இருக்கிறது. இதனால் தென் சீன கடல் எல்லையில் பெரிய அளவில் பதற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது.

அமெரிக்கா தனது USS Bunker Hill மற்றும் USS Barry எனப்படும் போர் கப்பல்களை சீன எல்லைக்கு அனுப்பி வைத்தது. அதோடு அமெரிக்காவுடன் மலேசியாவின் போர் கப்பல்களும் கூட்டு சேர்ந்து அங்கு சோதனைகளை செய்து வருகிறது . சீனாவின் அறிவித்த அறிக்கையின்படி தென் சீன பகுதியில் அமெரிக்கா 375000 படைகளை குவித்து இருக்கிறது. இதில் 60% கடற்படைதான். 40% தரைப்படை மற்றும் விமானப்படை ஆகும்.

american navy force

அதிலும் இங்கு 85000 வீரர்கள் மேலும்  அதி நவீன ஆயுதங்களும் இங்கே களமிறக்கப்பட்டுள்ளது. நேற்று இரவில் அதிக அளவில் அமெரிக்கா இங்கு படைகளை குவித்து இருக்கிறது. ஒரே இரவில் நடந்த இந்த மாற்றம் சீனாவை கலங்க வைத்துள்ளது. நேற்று இரவு பசிபிக் பகுதிக்கு அமெரிக்கா இப்படி அதிக அளவில் படைகளை அனுப்பியது ஏன் என்று தெரியவில்லை. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.

america navy force

இதற்கு சீனா தற்போது கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் சீன கடலை அமெரிக்கா அபகரிக்க பார்க்கிறது. இது எங்களுக்கு சொந்தமான கடல். இங்கே அத்துமீறல்களை நிகழ்த்தினால் பொறுத்துக் கொள்ளமுடியாது. அமெரிக்காவின் அத்துமீறல்களுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கப்படும். அமெரிக்க நினைத்து பார்க்க முடியாத பதிலடியை சீனா கொடுக்கும், என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனா தற்போது இந்தியாவின் லடாக் எல்லையில் படைகளை குவிப்பதால் , அமெரிக்கா போர் படைகள் களமிறங்கியுள்ளதா என்ற சந்தேகமும் எழும்பியுள்ளது.

Related News