திரையரங்குகளில் 'நெஞ்சம் மறப்பதில்லை ' பார்க்க ஐந்து காரணங்கள்         திறந்தவெளியில் கணவருடன் முரட்டு ரொமான்ஸ்..         அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         உறுதி ஆனது ஐயப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்..!         பிரபல நடிகர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்         சூப்பர்ஹிட் ரீமேக்இல் பிரியா ஆனந்த் உடன் இணைய உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி         ஒட்டுமொத்த பிக்பாஸ் குழுவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்         ஹர்பஜன் சிங்-லோஸ்லியாவின் 'ஃப்ரீண்ட்ஷிப்' டீஸர்         'பிக் பாஸ்' பட்டத்தை வென்றவர்- உதயநிதி ஸ்டாலினுடன் இணைகிறார்.         பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றப்படுகிறதா ?         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         சூடுபிடிக்கும் பிக்பாஸ் 5 போட்டியாளர்களின் பட்டியல்         பிக்பாஸ் 5வது சீசன் பற்றிய அப்டேட் ! எப்போ தொடங்கப்போகிறது தெரியுமா ?         பாலா எனக்கு வருவிய நீ ஆளா**         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     Coimbatore News      City news      லாக்டவுனால் வேலை இல்லையா..

லாக்டவுனால் வேலை இல்லையா..

   
லாக்டவுனால் வேலை இல்லையா..

வாடிக்கையாளர் சேவை (கஸ்டமர் சர்வீஸ்) பிரிவில் கிட்டத்தட்ட 20,000 பேருக்கு தற்காலிகமாக ( பருவகால) வேலைவாய்ப்பை வழங்குவதாக அமேசான் இந்தியா ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

புதிய வேலை வாய்ப்புகள் ஹைதராபாத், புனே, கோயம்புத்தூர், நொய்டா, கொல்கத்தா, ஜெய்ப்பூர், சண்டிகர், மங்களூரு, இந்தூர், போபால் மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் உள்ளன.

அமேசானின் 'மெய்நிகர் வாடிக்கையாளர் சேவை' திட்டத்தின் ஒரு பகுதியாக பெரும்பாலான பதவிகள் உள்ளன. வீட்டிலிருந்தே இந்த வேலைகளை செய்ய முடியும். இந்த வேலை என்னவென்றால், மின்னஞ்சல், சாட்டிங், சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளரிடம் பேச வேண்டும்.

வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணிக்கான தகுதி குறைந்த பட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு அல்லது கன்னடம் ஆகிய ஏதேனும் ஒரு மொழிகளில் நன்கு  புலமை உள்ளவராக இருக்க வேண்டும்.

செயல்திறன் மற்றும் வணிகத் தேவைகளின் அடிப்படையில், தற்போதைய தற்காலிக பதவிகளில் ஒரு சதவீதம் இந்த ஆண்டின் இறுதியில் நிரந்தர பதவிகளாக மாற்றப்பட வாய்ப்புள்ளது என்று அமேசான் இந்தியா அறிவித்துள்ளது.

அமேசான் இந்தியா இயக்குனர் (வாடிக்கையாளர் சேவை) அக்‌ஷய் பிரபு கூறுகையில், "வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தேவைக்கு பதிலளிக்கும் விதமாக வாடிக்கையாளர் சேவை அமைப்பு முழுவதும் பணியமர்த்தல் தேவைகளை நாங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்கிறோம். இந்திய மற்றும் உலகளாவிய விடுமுறை காலங்கள் தொடங்குவதால் அடுத்த ஆறு மாதங்களில் வாடிக்கையாளர் போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்" என்றார்.

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி
link :  https://www.amazon.jobs/en/jobs/1183207/customer-service-associate?cmpid=SPLICX0248M&utm_source=linkedin.com&utm_campaign=cxro&utm_medium=social_media&utm_content=job_posting&ss=paid  

 

Related News