நாடு முழுவதும் இன்று முதல் சில புதிய சீர்திருத்தங்களை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வருகின்றன.
முதலாவதாக, ஓட்டுனர் உரிமத்திற்கான ஆவணங்கள் இ-செல்லான்கள் ஆகிவை இனிமேல் இணையதளம் வாயிலாக மட்டுமே பெறப்படும். உரிமம் பெறுவதற்கு அளவுக்கு அதிகமான ஆவணங்களை இனி சமர்ப்பிக்க தேவையில்லை.
இரண்டாவதாக மருத்துவ காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் தங்களது பாலிசிகளை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வெளியிடுவது கட்டாயமாக்கப்படுகிறது . டெலி மெடிசனுக்கும் இனி காப்பீடு பொருந்தும்.
மூன்றாவதா, இனிப்புகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் அவற்றை எத்தனை நாட்களுக்குள் சாப்பிடவேண்டும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிப்பது கட்டாயம் ஆக்கப்படுகிறது.
இவை தவிர இறக்குமதியாகும் டிவிகளுக்கு 5 சதவீத சுங்க வரி விதிப்பாத்தால் அவற்றின் விலை அதிகரிக்கும். அதே போன்று வெளிநாட்டில் படிக்கும் பிள்ளைகள் அல்லது வேறு உறவினர்களுக்கு பணம் அனுப்புவோர் இடம் இருந்து கூடுதலாக 5 சதவீகிதம் வரி வசூலிக்கப்படும்.