கோவையில் பருவநிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு புறநோயாளிகள் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு தினசரி சராசரியாக 50 பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதில் இப்போது 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் உள்நோயாளிகள் 30 பேர் தனி வார்டில் பல்வேறு வைரஸ் காய்ச்சல்களால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பருவநிலை மாற்றத்தால் தண்ணீர் மற்றும் கொசுவால் வைரஸ் காய்ச்சல் பரவுவதால், குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். வீட்டின் முன் தேங்கும் நீரினை உடனடியாக சுத்தம் செய்வதுடன், கொசுக்கள் பரவாமல் தவிர்க்க வேண்டும். 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரியை அணுகி பரிசோதித்து சிகிச்சை பெற வேண்டும் என கோவை மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறினார்.
மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/city-news/ கிளிக் செய்யவும்.