மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     Coimbatore News      City news      18 கோடி செலவில் புதிய 13 கி.மீ., சாலை

18 கோடி செலவில் புதிய 13 கி.மீ., சாலை

   
18 கோடி செலவில் புதிய 13 கி.மீ., சாலை

மேட்டுப்பாளையம் :

ஊமப்பாளையத்திலிருந்து சிறுமுகை வரை, 13 கி.மீ சாலை மிகவும் கரடுமுரடாக உள்ளது , இதனை சரி செய்யும் வகையில் 18 கோடி ரூபாய் செலவில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இச்சாலை பணிகள் முடிவடைந்தப்பின் கோபி, சத்தி, பவானிசாகர் ஆகிய ஊர்களுக்கு, இது பைபாஸ் சாலையாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

மேட்டுப்பாளையத்தை அடுத்த ஓடந்துறை ஊராட்சி ஊமப்பாளையத்திலிருந்து, பாலப்பட்டி, வச்சினம்பாளையம், மூலத்துறை, கிச்சகத்தியூர் வழியாக சிறுமுகை வரை, 13 கி.,மீட்டர் தூரத்திற்க்கு உள்ள சாலை கரடுமுரடாகவும் குறுகலாகவும் உள்ளது.

இவ்வழியாக அன்றாடம் டவுன் பஸ் சென்று வருகிறது அதுபோக நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. சில இடங்களில் சாலை மிகக் குறுகலாக உள்ளதால், ஒரே சமயத்தில்  இரு வாகனங்கள் அவ்வழியே செல்ல முடியாத நிலை அவ்வப்போது ஏற்படுகிறது. இந்த சாலையை  சரிசெய்து அகலப்படுத்தி தரக்கோரி பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், மத்திய சாலை திட்டத்தின் கீழ் சாலையை  விரிவு படுத்தி மற்றும் புதிய சாலை அமைக்க, 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

ஊமப்பாளையத்தில் இருந்து சிறுமுகை வரை மூனேமுக்கால் மீட்டர் அகலத்தில் உள்ள ரோட்டை, ஏழு மீட்டர் அகலத்துக்கு விரிவாக்கம் செய்து புதிய சாலை அமைக்கப்போவதாகவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்காக ரோட்டின் இருபக்கமும்  தலா, 1.60 மீட்டர் அகலத்துக்கு புதிதாக சாலை அமைக்கின்றனர். 


ரோட்டின் இருபக்கம் சாலையை அகலப்படுத்த இடையூறாக உள்ள, 75 மின் கம்பங்கள் வேறுஇடங்களுக்கு மாற்றப்பட உள்ளனர். 13 கி.,மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் இச்சாலையில் 15 இடங்களில் சிறிய பாலங்கள் கட்டப்படுகின்றன.  மேலும் இச்சாலை பணிகள் அனைத்தும் 11 மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். 

கோபி, சத்தி, பவானி சாகர், புளியம்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள், சிறுமுகை வழியாக மேட்டுப்பாளையம் வராமல், நேரடியாக உதகைக்கு செல்லவும் இது  பைபாஸ் ரோடாக மாற்றப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது, அதேபோல் உதகையில் இருந்து வரும்  சுற்றுலா வாகனங்கள், மேட்டுப்பாளையம் நகருக்குள் செல்லாமல், புதிதாக அமைக்கப்படும்  ஊமப்பாளையம் சாலை வழியாக சிறுமுகைக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய இருக்கின்றனர் 

எனவே இச்சாலை பணிகள் முடிவடைந்தபின் மேட்டுப்பாளையம் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

 

 

Related News