மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     Coimbatore News      City news      ஏமாற்றம் அடைந்த 1.ரூ இட்லி பாட்டி

ஏமாற்றம் அடைந்த 1.ரூ இட்லி பாட்டி

   
ஏமாற்றம் அடைந்த 1.ரூ இட்லி பாட்டி

உதவிக்காக காத்திருக்கும் கோவை கமலாத்தாள் !!!

கோவை: கமலாத்தாள் என்னும் மூதாட்டிக்கு வீடு வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்த நிலையில் இதுவரை எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை.

கமலாத்தாள் பூலுவாபட்டி ( கோவை ) கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 80 ஆகும், இந்த தள்ளாத வயதிலும் தம்மால் முடிந்த உதவியை பொதுமக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன்  ரூ.1க்கு இட்லி விற்று வருகிறார், அனைவரின் பசியையும் தீர்த்து வருகிறார். 

1 rupee idli

இந்த கமலாத்தாள் பாட்டி மிக எளிமையான வகையில் இட்லி கடை நடத்தி வருகிறார், விறகு அடுப்பில், குடிசை வீட்டில் இட்லி சுட்டு விற்கும் இவரது சேவையை, கடைக்கு சாப்பிட வந்த சிலர் அதனை போட்டோ மற்றும் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பகிர்தனார். இதனை கண்ட ஹெச்பி, இண்டேன் மற்றும் பாரத் பெட்ரோலியம் சமையல் எரிவாயு நிறுவனங்கள் தரப்பில், கமலாத்தாள் பாட்டிக்கு இலவச அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுத்தன. இதை தொடர்ந்து மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா அவரது தொழிலை ஊக்குவிக்கும் விதமாக நிதி உதவி செய்வதாக உறுதி அளித்தார்.

அவருக்கு ஒரு நிரந்தர வீடு கட்டித் தரப்படும் என்று உள்ளூர் பிரமுகர்கள் சிலர் வாக்குறுதி கொடுத்தனர், ஆனால் கமலாத்தாள் பாட்டியின் வாழ்வில் இதுவரை மாற்றம் வரவில்லை. வாக்குறுதி கொடுத்தவர்களை நம்பி தான் ஏமார்ந்து விட்டதாக கூறி கமலாத்தாள் பாட்டி வேதனை தெரிவித்தார்.

Related News