நேற்றய போட்டியிலும் முதல் ஓவரை தீபக் சாஹர்தான் வீசினார். பந்துகள் நன்றாக ஸ்விங் ஆனது. இதனால், பஞ்சாப் அணி துவக்க வீரர் மயங்க் அகர்வால் சாஹர் ஸ்விங்கில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்ந்ததால், பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் மீண்டும் தீபக் சாஹர், தனது மூன்றாவது ஓவரில் கிறிஸ் கெய்ல் 10 (10), நிகோலஸ் பூரன் 0 (2) ஆகியோரை அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பி அசத்தினார். இவரது அதிரடி அதோடு மட்டும் நின்றுவிடவில்லை. தனது கடைசி ஓவரில் தீபக் ஹூடாவை 10 (15) வீழ்த்தினார்.
மொத்தம் 4 ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 13 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்...