வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் வாரிசு.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா நடித்துள்ளார்.
இப்படத்தை தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைத்துள்ளார்,இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது.
வாரிசு படப்பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அதிலும் குறிப்பாக 'சோல் ஆஃப் வாரிசு' பாடல் அனைவரின் நெஞ்சில் தனி இடத்தை பிடித்துவிட்டது.
இந்நிலையில், 'சோல் ஆஃப் வாரிசு' பாடல் உலகளவில் நம்பர் 1 இடத்தை பிடித்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது.இதனை அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பில்போர்ட் அறிவித்துள்ளது.இதனை விஜய் ரசிகர்களால் கொண்டாடி வருகிறார்கள்.