Home     News       20 நாட்கள் ஆடை இல்லாமல் நடித்த அமலாபால் 

   20 நாட்கள் ஆடை இல்லாமல் நடித்த அமலாபால் 

   
 20 நாட்கள் ஆடை இல்லாமல் நடித்த அமலாபால் 

ஆடை படத்தின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே  பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அமலாபால் அரைகுறை ஆடையில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது.  இந்த நிலையில் தற்போது வெளியான படத்தின் டிரெய்லரில் அந்த அரைகுறை ஆடைகூட இல்லாமல் அமலாபால்(AmalaPaul) நிர்வாணமாக தோன்றி ரசிகர்களை மேலும் அதிர வைத்துள்ளார். 

இப்படத்தின் ட்ரெய்லர் சற்று புதிதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அமலாபாலை காணவில்லை என்று அவரது அம்மா போலீசில் புகார் அளிப்பது போன்றும் மேலும்  தனது மகள் குடித்திருந்தால் என்று கூறும் வகையில்  டிரெய்லர் தொடங்குகிறது. 


பின்  போலீஸ் வாகனங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். போலீசார் எல்லோரும் உயரமான கட்டிடத்தை பார்த்தபடி நிற்கின்றனர். பத்திரிக்கையாளர்கள் அங்கு இருப்பவர்களிடம் கேள்வி கேட்பது போன்றும், அப்போது அந்த  உயரமான கட்டிடத்தில் ஒரு பெண் ரத்தவெள்ளத்தில் கிடப்பது போன்றும், அமலாபால் உடம்பில் ஒட்டு துணிகூட இல்லாமல் உட்கார்ந்திருக்கும் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். தமிழ் பட வரலாற்றில் இதுபோன்ற காட்சியில் எந்த நடிகையும் நடித்தது இல்லை மற்றும் அமலாபால் மிகவும் துணிச்சலாக இப்படத்தில் நடித்துள்ளார் என்று திரையுலக வட்டாரத்தில் பேசிவருகின்றனர் 

இப்படத்தில் நிர்வாண காட்சிகள் அமைந்திருக்கிறது, அதில் நடிக்கவேண்டும் என்பதற்க்காக 20 நாட்கள் எந்த ஆடையும் இல்லாமல் நடித்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அமலாபாலின் துணிச்சலானா நடிப்பை வலைத்தளத்தில் பலரும் பாராட்டிவருகின்றனர். சமந்தாவும் தனது பாரட்டை தெரிவித்துள்ளார். 


ஆடை படத்தை ரத்ன குமார்(Rathna Kumar) இயக்கி உள்ளார் மேலும் இப்படத்திற்கு தணிக்கை குழுவினர்  ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் குறித்து டைரக்டர் ரத்ன குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு “தனிமனித சுதந்திரம் மற்றும் சுய ஒழுக்கத்தை ஆடை படம் பேசுகிறது." அமலாபால் ஆடை இல்லாமல் தோன்றும் காட்சி சிறிது நேரம்தான். அதை தாண்டி படத்தில் பல விஷயங்கள் உள்ளன என்றும் கூறியுள்ளார் ஆடை படத்தின் டைரக்டர் ரத்ன குமார். 

Related News