இந்தியா அளவில் உயரிய விருதாக கருதப்படுவது தேசிய விருது. இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. 2020-ம் ஆண்டு தியேட்டரில் ரிலீசான படங்கள் மிகவும் குறைவு. ஏனெனில் அந்த ஆண்டு தான் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சமடைந்தது. இதனால் திரையரங்குகள் கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு மேல் மூடப்பட்டு இருந்தன. அதேபோல் அந்த ஆண்டு பெரும்பாலான படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டன. அந்த படங்களுக்கும் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், அவைகளும் தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழில் சூர்யாவின் சூரரைப் போற்று, விஜய் சேதுபதியின் க.பெ.ரணசிங்கம் ஆகிய படங்கள் விண்ணப்பித்துள்ளன. இந்த இரண்டு படங்களுக்கும் நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.