நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் என்றால் தென்னிந்தியாவில் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நயன்தாரா எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கு மற்றும் அவர் நடித்த திரைப்பட விழாக்கள் என எதிலும் பங்குபெறாத காரணத்தினால் சினிமா பிரபலங்கள் இதை ஒரு குற்றச்சாட்டாக கூறுகின்றனர். மேலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைபடங்களில் இவர் நடித்தால் மட்டுமே ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று இருக்கும் நிலையில். நயன்தாரா எந்த ஒரு விளம்பர நிகழ்ச்சிக்கும் வராத காரணத்தை ஒரு மாத இதழுக்கு கூறியிருக்கிறார்.
அதாவது நயன்தாரா என்ன நினைக்கின்றார் என்று யாருக்கும் தெரிய வேண்டாம் என்பது மற்றும் இவர் கூறுவதை பலரும் தவறாக சித்தரிப்பதே காரணமாகும். இதனால் வரும் பின் விளைவுகளை சமாளிப்பது மிக கடினமாக இருக்கின்றதாம், முன்னால் விளம்பர காட்சிகளில் நடித்த இவர் முதலில் அதை தாம் உபயோகித்த பின்பே அதற்கான விளம்பர நிகழ்ச்சியில் நடிப்பாராம்.
இதை போன்ற மற்றொரு நடிகர் தமிழ் நாட்டில் தல அஜித்குமார். அவரையே நயன்தாரா முன்னோடியாக வைத்துள்ளார்.