நடிப்பிலிருந்து விலகுகிறேன்" - நடிகர் ஆமீர் கான் திடீர் முடிவு         வடிவேலுவின் நாய் சேகர் படத்திலிருந்து பாடல் வெளியீடு         லவ் டுடே' படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு         23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி         அஜித்தின் 62வது  படத்தில் ஜி.பி.முத்து         ‘வாரிசு – துணிவு’ எந்த படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்படும்?         வசூல் மழையில் ‘லவ் டுடே’ திரைப்படம்         நாக சைத்தன்யாவுடன் மீண்டும் இணையும் சமந்தா        
Home     News      ‘வாரிசு – துணிவு’ எந்த படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்படும்?

  ‘வாரிசு – துணிவு’ எந்த படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்படும்?

   
‘வாரிசு – துணிவு’ எந்த படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்படும்?

அஜித்தில் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படமும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளன. 8 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரின் படமும் ஒரே நாளில் வெளியாகுவதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வாரிசு படத்திலிருந்து போஸ்டர்கள் மற்றும் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். துணிவு படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து எச்.வினோத், அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் இணையும் 3 ஆவது படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. துணிவு படத்திலிருந்து 2 போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில் எந்த படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்பது குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது- சில முறை அஜித் சார், விஜய் சார் படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆகியுள்ளன.  துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கும் சமமான தியேட்டர்கள், ஸ்க்ரீன்கள் தான் ஒதுக்கப்படும். துணிவு படத்தின் தியேட்டர் மற்றும் சாட்டிலைட் உரிமம் தொடர்பான வர்த்தகம் 4 மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது.

Related News