தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார். நடிகர் விஜய் சமீபத்தில் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில், நடிகர் விஷாலும் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கான பெயரை இன்று காலை விஷால் அறிவிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும், விஷாலும் விஜய்யை போன்று 2026- ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
விஷால் தனது ரசிகர் மன்றத்தின் பெயரை 'விஷால் மக்கள் நல இயக்கம்' என மாற்றம் செய்துள்ளார். இவர் ஏற்கெனவே அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது வேட்புமனுவில் தவறு இருப்பதாக கூறி அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/cine-news/news/ கிளிக் செய்யவும்.