கொம்பன் முத்தையா இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா தயாரிப்பில் அவரின் சகோதரர் கார்த்தி நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் விருமன். கொம்பன் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள அந்த திரைப்படம் வரும் 12ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் பாடல் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள படத்தின் பாடல்களை வெளியிட்டதுடன். அதே நிகழ்ச்சியில் விருமன் திரைப்படத்தின் டிரைலரையும் பட குழுவினர் வெளியிட்டனர்.
இந்த திரைப்படத்தில் கார்த்தியுடன் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிகர்கள் ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.