பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பேசிய விடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.
பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
இசை வெளியீட்டு விழாவின் உரிமத்தை கைப்பற்றிய சன் நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பாததால் படத்தின் பாடல்களும் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில், ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1 மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் வாரிசு இசைவெளியீட்டு விழா ஒளிபரப்பப்படும் என்று சன் நிறுவனம் அறிவித்துள்ளது.