நமீதா புதிய OTT தளமான 'நமீதா தியேட்டர்' ஐ அறிமுகப்படுத்தினார்         பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை ரசிகர்கள்..         ஷிவானி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாஜி         தளபதி65 புதிதாக இணையும் பிரபலம்         அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்கும் எ ர் முருகதாஸ்         திருமணத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா ஷெட்டி         பிரம்மாண்டமாக தயாராகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி         இயக்குனர் கே வி ஆனந்த் திடீர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்         கதிர் உடன் இணையும் குக் வித் கோமாளி பவித்ரா!!         நடுவராக களமிறங்கும் ரம்யாகிருஷ்ணன்         வெயிலின் தாக்கதை குறைக்கும் சன்னி லியோன்.!         விக்ரம் படக்கதையில் மாற்றமா?         மயில் போல் நடனம் ஆடும் லாஸ்லியா         இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம்         குக் வித் கோமாளியின் மிகப்பெரிய சாதனை         மாலத்தீவில் மார்க்கமாக சுற்றும் பார்வதி         இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர்         காதலில் விழுந்த ஓவியா..         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?

  மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?

   
மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?

     வனிதா சில படங்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபின் தனது அதிகார பேச்சால் தினமும் ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வந்த நிலையில், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்கிறார். அவருக்கு முன்னதாகவே திருமணம் ஆகி மனைவியும், மகனும் உள்ளார்கள். அது தெரிந்தும் முன்னாள் மனைவியுடன் விவாகரத்து பெறாமலே வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டார்.

இதனால் பல சர்ச்சையில் சிக்கிய வனிதா மட்டும் பீட்டர் பாலை சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வந்தனர். அதற்கு எல்லாம் சலிக்காத வனிதா பீட்டர் பாலுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டார்.

இந்த சர்ச்சையை வைத்து பொழுதை போக்கி வந்த ரசிகர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக வனிதாவை பற்றி எந்த ஒரு தகவல்களும் கிடைக்கவில்லை. 

தற்பொழுது வனிதாவை பற்றின ஒரு சுவாரசியமான செய்தி வெளியாகியுள்ளது. இயக்குனர் ரவீந்தர் அவர்கள் பீட்டர் பால் வனிதாவுக்கு திருமணத்தை எதிர்த்தும், பீட்டர் பாலின் முன்னாள் மனைவிக்கு உதவியும் செய்து வந்தார், இந்நிலையில் வனிதா பீட்டர் பாலை வீட்டை விட்டு விரட்டிய செய்தியை உறுதி செய்துள்ளார்.

பீட்டர் பால் மற்றும் வனிதா கோவா சென்றுள்ளார்கள், அப்போது பீட்டர் பால் அதிகம் மது அருந்தியதால் நிலை தடுமாறி வனிதாவிடம் சண்டையிட்டு அவரை தாக்க முயன்றுள்ளார். அதன்பின் சமாதானமாகி சென்னை வந்தடைந்த வனிதா பீட்டர் பாலை வீட்டில் இருந்து விரட்டி விட்டதாக செய்திகள் வெளியானது, இது வதந்தியாக இருக்குமோ என்று பேசப்பட்டு வந்த நிலையில் இயக்குனர் ரவீந்தர் அதை உறுதி செய்துள்ளார்.

சென்னை வந்தடைந்த பின் வனிதாவும் அவரது குடும்பத்தினரும் பீட்டர் பாலை அடித்து, உதைத்து வீட்டை விட்டு விரட்டியுள்ளனராம்.

இதை கண்ட ரசிகர்கள் “சாபம் பழித்து விட்டது” என்று கூறி வருகின்றனர்.

Related News