மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      அஜித்துக்கு மீண்டும் விபத்து!

  அஜித்துக்கு மீண்டும் விபத்து!

   
அஜித்துக்கு மீண்டும் விபத்து!

"தீரன் அதிகாரம்" திரைப்படத்தில் தமிழ் திரைப்பட ரசிகர்களை திரும்பி பார்க்க செய்தவர் இயக்குனர் எச்.வினோத். இவர் இப்போது தல அஜித் நடிப்பில் வெளிவரும் "வலிமை" திரைப்படத்தை இயக்கிவருகிறார். இத்திரைப்படத்தில் யார் அஜித் அவர்களுக்கு வில்லன்? என்ற தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. ஆனால் அஜித் அவர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடிக்க போவது பாலிவுட் முன்னணி நடிகை யாமி கெளதம்.

யாமி தமிழ் திரைப்படங்களில் நடிப்பது இது மூன்றாவது முறை, முன்பே இவர் கௌரவம் மற்றும் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மிக விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சற்று தடுமாறியது நம் தல அஜித் விபத்து தான். வலிமை திரைப்படத்தின் முக்கிய சண்டைக்காட்சி ஒன்று படமாகி வரும் நிலையில் பைக் சண்டை காட்சியில் நம் தல அஜித் கீழே விழுந்து விட்டாராம் அதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது, இருப்பினும் காயத்தை பொறுப்பெடுத்துக் கொள்ளாமல் நடித்தார் தல அஜித் மீண்டும் காட்சியை தொடர்ந்துள்ளார் அஜித் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பரவ அனைவரும் #GetWellSoonThala என்ற ஹஸ்டேக்கை டீவீட்டாரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Related News