வரும் பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்கள் வெளியாக உள்ளன.எந்த தேதியில் இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியாகும் என படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
வெளிநாட்டில் இந்த இரு திரைப்படங்களின் டிக்கெட் புக்கிங் தற்போது துவங்கியுள்ளது, UK யில் ஓபன் செய்யப்பட்ட இந்த இரு திரைப்படங்களின் டிக்கெட் புக்கிங் படுமோசமான நிலையில் உள்ளது என தெரியவந்துள்ளது.
UKவில் விஜய்யின் வாரிசு படத்திற்கு வெறும் 40 டிக்கெட்களும், அஜித்தின் துணிவு படத்திற்கு வெறும் 22 டிக்கெட்களும் விற்றுப்போய் உள்ளது,
விஜய், அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கே இப்படியொரு நிலைமையா என்று பேசப்பட்டு வருகிறது.