ஜனவரி 11 ஆம் தேதி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு , இயக்குனர் எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ள துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது.
அஜித் முழுக்க முழுக்க நெகடிவ் ரோலில் நடித்து இருக்கும் படம் தான் துணிவு. நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி படுவைரல் ஆனது.
இணையத்தில் துணிவு ட்ரைலர் தான் முதலிடத்தில் இருந்து வருகிறது.
வங்கிக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் நபராக அஜித் மிரட்டி இருந்தார்.
ஒரு நாளில் 30 மில்லியன் ரியல் டைம் பார்வைகளை பெற்று இருப்பதாக ஜீ ஸ்டூடியோ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்நிலையில் தற்போது ட்ரைலர் 24 மணி நேரத்தில் துணிவு ட்ரைலர் views கணக்கில் மிகப்பெரிய மைல்கல்லை கடந்து இருக்கிறது.