தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் பிரியா பவானி ஷங்கர். ஒரு சில இளைஞர்களின் மனதை கொள்ளை அடிக்கும் நடிகை இவர்.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல் தான் 'கல்யாணம் முதல் காதல் வரை' அந்த கதையில் பல் டாக்டராக நடித்து பலரின் மனதை கவர்ந்தார். சீரியலுக்கு பிறகு இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. மேயாத மான் படத்தின் மூலம் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். அந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹிட் லிஸ்ட்டில் இன்னும் இருக்கிறது.
படங்களில் நடிப்பதை தவிர்த்து பிரியா தற்போது போட்டோ ஷூட்டிங்கில் பிஸியாக வளம் வருகிறார். அது மட்டும் இன்றி தனது காதலனுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram