அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் விஜய் இயக்கம் புதிய படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற உள்ளது.
என்னை அறிந்தால் திரைப்படம் மூலமாக பிரபலமான அருண் விஜய், தற்போது நல்ல கதைகளை தேர்வு செய்து நாயகனாக நடித்த வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் இறுதியாக யானை திரைப்படம் வெளியானது.
ஆக்சன் ஃபார்முலாவில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்னும் சில திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
அதே சமயம் இன்னும் சில புதிய திரைப்படங்களிலும் அருண் விஜய் ஒப்பந்தமாகி வருகிறார். அதில் குறிப்பாக கிரீடம், மதராசபட்டினம், தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய விஜயின் புதிய திரைப்படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார்.
அந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் லண்டன் நகரில் நடைபெறுகிறது என தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தரப்பில் கூறுகின்றனர். அருண் விஜய் மற்றும் இயக்குனர் விஜய் இணையும் படம் ஆக்சன் பின்னணியில் உருவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.