சரவணன் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள படம் "தி லெஜெண்ட்".ஜெடி-ஜெர்ரி இப்படத்தை இயக்கியுள்ளனர்.இப்படத்திற்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
கதைக்களம்:
இப்படத்தில் சரவணன் உலக புகழ் பெற்ற விஞ்ஞானியாக நடித்திருக்கிறார்.இதற்கு பிறகு இவர் தன சொந்த ஊருக்கு வருகிறார்.தன் மக்களுக்கு நம்மை அளிக்கும் விஷயங்களை செய்ய வேண்டும் என்று ஊருக்கு வந்த சரவணன் தன் தாத்தா கட்டிய பள்ளியை நடத்துகிறார்.இதற்கிடையில் சரவணன் தன் பள்ளி பருவ நண்பரான ரோபோ ஷங்கரை சந்திகிறார்.அந்த சமயத்தில் ரோபோ ஷங்கர் ,அவரது மனைவி ,இரு குழந்தைகள் சக்கரை நோயால் அவதிப்பட்டுவந்ததை தெரிந்துகொண்டார்.தனது நண்பர் ரோபோ ஷங்கர் ஒரு நாள் மாரடைப்பால் உயிரிழந்தார்.எனவே இந்த நோய்க்கான தீர்வை கண்டுபுடிக்க வேண்டும் என்று தீவிர முயற்சியில் இறங்குகிறார்.இம்முயற்சியில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதே மீதி படத்தின் கதை ஆகும்.