விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களாக சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 நடைபெற்றுவந்தநிலையில் நேற்று பிரமாண்டமாக பைனல் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர் கிரிஷாங்க். அவருக்கு 60,00,000 மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.
இறுதியில் யுவன் சங்கர் ராஜா கையில் வின்னர் அனௌன்ஸ்மென்ட் நடத்தப்பெற்றது. மேலும் டைட்டில் வின்னர் கிரிஷாங்க்க்கு யுவன் இசையில் பாட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இந்த சிறு வயதில் சாதித்தபின் கண்ணீர் விடும் கிரிஷாங்க்.
2வது இடம் பெற்ற ரிஹானா, நம் அனைவருக்கும் பிரியமான ரிஹானா 2வது இடம் பெற்றுள்ளார். அவருக்கு பரிசு தொகையாக ரூபாய். 5 லட்சம் தரப்பட்டுள்ளது.
3வது இடம் பிடித்தவர் நேஹா , இவருக்கு 3 லட்சம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 சவரன் மதிப்புள்ள தங்க காயின் வழங்கப்பட்டுள்ளது.